technology

img

இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் 'ஒன் பிளஸ் 9 ஆர்டி' ஸ்மார்ட்போன் 

ஒன் பிளஸ் நிறுவத்தின் புதிய தயாரிப்பான ஒன் பிளஸ் '9ஆர்டி ஸ்மார்ட்போன்' ஜனவரி 14 அன்று இந்தியாவில் அறிமுகமாகிறது.

சீனாவைச் சேர்ந்த ஒன் பிளஸ் நிறுவனம் தன்னுடைய புதிய தயாரிப்பான 9ஆர்டி ஸ்மார்ட்போனை கடந்த அக்டோபர் மாதம் சீனாவில் அறிமுகப்படுத்திய நிலையில், இந்தியாவில் ஜனவரி 14 ஆம் தேதி அறிமுகப்படுத்தவுள்ளது. மேலும், இதனுடன் 'ஒன் பிளஸ் பட்ஸ் இஸட்2' இயர் போனும் வெளியாகவுள்ளது. 

ஆன்ராய்டு 11 வெர்சன் கொண்ட இந்த ஒன் பிளஸ் 9ஆர்டி ஸ்மார்ட்போன், 6.5 ஃபுல் எச்டி திரை, 888 குவால்காம் ஸ்னாப்டிராகன், 8ஜிபி உள்ளக நினைவகம், 128ஜிபி கூடுதல் நினைவகம், 50 எம்பி முதன்மை கேமரா, 16 எம்பி செல்ஃபி கேமரா, மெமரி கார்டு வசதி, 4500 மெகா வாட் அளவுள்ள பேட்டரி வசதி போன்ற சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. 

இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனை விலை குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. இருப்பினும் ரூ.38,000 இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.    

;